Home

Friday, 8 February 2013

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் மறுமலர்ச்சி ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்


தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மறுமலர்ச்சி ஏற்படும் என்று பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.
நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், வழுவூரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக இளைஞரணியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் விஜிகே. மணி இல்ல விழாவில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது:
தமிழகத்தை ஆள பாமகவுக்கு ஒருமுறை வாய்ப்பளித்தால் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். பாமக ஆட்சிக்கு வந்தால், தேவையற்ற இலவசங்கள் நிறுத்தப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழில் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இதுபோன்ற நல்லாட்சி தமிழகத்தில் அமைய 2016-ல் பாமக ஆட்சி அமைக்க வேண்டும்.
திமுக, அதிமுகவில் அடிமைப்பட்டு கிடக்கும் மக்களை மீட்க பாமகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சித் தொண்டர்களுக்கு வீரத்துடன், விவேகமும் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

Wednesday, 6 February 2013

சிறுமி கடத்தலை தட்டிக் கேட்ட உறவினர் கொலை; துணை போகும் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?: பாமக கேள்வி


சிறுமி கடத்தலை தட்டிக் கேட்ட உறவினர் கொலை; துணை போகும் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று விளக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்று நாடகத் திருமணம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. பெண் வீட்டாரை மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்குடன் தான் இத்தகைய திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள போதிலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதையே பிழைப்பாக கொண்டுள்ள ஒரு கும்பல், இத்தகைய சட்ட விரோத செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகிலுள்ள தொட்டனஹள்ளி கிராமத்தில் வாழும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் 14 வயது மகள் கல்யாணியை அருகிலுள்ள அகலக்கோட்டை கிராமத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திம்மராயப்பனின் மகன் மஞ்சு என்பவர் திருமணம் செய்வதாக ஆசை காட்டி தமது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் உதவியுடன் பெங்களூருக்குக் கடத்திச் சென்று விட்டார். 14 வயதே ஆன மைனர் சிறுமியை நாடகத் திருமணம் செய்யும் நோக்குடன் கட்டப்பஞ்சாயத்துக் கும்பல் பெங்களூருக்கு கடத்திச் சென்றிருப்பதை அறிந்த பெற்றோரும் உறவினர்களும் விரைந்து சென்று சிறுமியை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞன் மஞ்சுவையும் பாதுகாப்பாக காவல்துறையிடம் ஒப்படைக்கும் நோக்குடன் அழைத்து வந்துள்ளனர்.

நேற்று மாலை தளி அருகே வந்து கொண்டிருக்கும்போது அவர்களை வழிமறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கும்பல் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியிருக்கிறது. சிறுமியின் பெரியப்பாவை கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்துவிட்டு, இளைஞன் மஞ்சுவை அழைத்துச் சென்றிருக்கிறது. மைனர் சிறுமியை நாடகத்திருமணம் செய்து பணம் பறிக்கும் நோக்குடன் கடத்திச் சென்றதுடன், அச்சிறுமியின் உறவினரை கட்டப் பஞ்சாயத்துக் கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவின் சார்பில் கடுமையாக கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படுகொலை தொடர்பாக இதுவரை 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது போதுமானதல்ல. இதன் பின்னணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கும்பலையும் கைது செய்யவேண்டும். தில்லியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த அவசர சட்டத்தின்படி அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல்துறையினரை வலியுறுத்துகிறேன்.

நாடகத் திருமணங்களுக்கும், அதற்காக பெண்கள் கடத்தப்படுவதற்கும் காரணம் இத்தகைய செயல்களை தமிழகத்தில் உள்ள தி.மு.க., இடது சாரிகள், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் ஆதரிப்பது தான். அனைத்து சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்ததற்காக மருத்துவர் அய்யாவை விமர்சித்த இந்தக் கட்சிகள், நாடகத்திருமணம் செய்வதற்காக 14 வயதே ஆன சிறுமியை கடத்திச் செல்வதையும், தட்டிக் கேட்ட உறவினரை படுகொலை செய்ததையும் ஆதரிக்கின்றனவா? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

-
இவ்வாறு அந்த அறிக்கையில் பாமக தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடத்தப்பட்ட வன்னியர் சமுதாயப் பெண், தட்டிக் கேட்ட உறவினர் கொலை - 10 பேர் மீது வழக்குப் பதிவு


ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கடத்தப்பட்ட வன்னியர் சமுதாயப் பெண் கர்நாடகத்தில் வைத்து மீட்கப்பட்டார். அவரை அவரது பெரியப்பா மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவரை சிலர் அடித்துக் கொலை செய்தனர். இதையடுத்து போலீஸார் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள அலகக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தைச சேர்ந்தவர் திம்மராயப்பா மகன் மஞ்சு (22). இவர் டிரைவர் வேலை செய்து வந்தார். இவர் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் வகுப்பைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சனிக்கிழமை மஞ்சு கடத்திச் சென்றுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் மாணவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மாணவியும், அவரைக் கடத்திய மஞ்சுவும் கர்நாடக மாநிலம் பன்னரகட்டா பகுதியில் பதுங்கியிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் பெறறோர், பெரியப்பாவா மாதேஷ் உள்ளிட்டோர் கர்நாடகம் விரைந்தனர். மாணவியை சந்தித்து சமாதானம் பேசி அவரை அழைத்து வந்தனர்.
அவர்கள் தளி அருகே ஏரிப் பகுதி வழியாக காரில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மஞ்சுவும், அவரது நண்பர்களும் மாணவியை மீண்டும் கடத்த முயற்சி்தனர். இந்த முயற்சியில் இரு தரப்பும் கடுமையாகமோதியது. அப்போது மாதேஷ் கடுமையாக தாக்கப்பட்டார். அதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இந்த கடத்தல், கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும நிலவுகிறது. கலவரம் வெடித்து விடாமல் தடுப்பதற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Monday, 4 February 2013

டாஸ்மாக் - TASMAC எனப்படும் தமிழ் நாடு மாநிலவாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation)


டாஸ்மாக் (டாசுமாக், TASMAC) எனப்படும் தமிழ் நாடு மாநிலவாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation)  தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம்தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறைவர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.
தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகம், 1983 ஆம்ஆண்டு எம். ஜி.ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால்தமிழகத்தில் மதுவகைகளின் மொத்தவிற்பனைக்காகதொடங்கப்பட்டது. இந்தியநிறுவனச் சட்டம் - 1956 இன் படி இந்நிறுவனம் மாநில அரசின்கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது.தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்துவந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னைமாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது.அன்றிலிருந்து 2001 வரை, 1971-74, 1983-87, 1990-91  ஆகிய சிறு கால இடைவெளிகளைத்  தவிர  தமிழகத்தில்  மது  விற்பனை  தடை செய்யப்பட்டிருந்தது.  விஸ்கிபிராந்திரம்ஓட்காவைன்  போன்ற இந்தியாவில்  தயாரிக்கப்படும்  வெளிநாட்டு  மது வகைகளும்  கள்,  சாராயம்  போன்ற உள்நாட்டு மதுவகைகளும்  தடை  செய்யப்பட்டிருந்தன. 2001 இல்  மதுவிலக்கு  விலக்கப்பட்ட போது,மாநில அரசு  டாஸ்மாக்  நிறுவனத்தை மீண்டும்  மொத்த  விற்பனை  நிறுவனமாக  பயன்படுத்தியது.  சில்லறை  விற்பனைக்கு மதுக்கடைகள்  தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. ஆனால் பல கடைமுதலாளிகள் தங்களுக்குள் குழு அமைத்து செயல்பட்டதால் (cartelisation) கடைகள் குறைவான ஏலத்திற்குச் சென்றன. இதனால்அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை எதிர்கொள்ள 2002-03  ஆம்  நிதியாண்டில் அரசு  ஏல முறையை மாற்றியமைத்தது.  ஒரே சீரான வருவாயுள்ள மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டு பின்குலுக்கல் முறையில் பிரித்தளிக்கப்பட்டன. ஆனால் முதலாளிகள் இம்முறையை எளிதில் முறியடித்து விட்டனர். ஏலம் முடிந்தபின்பிறருக்காக விட்டுக் கொடுத்தல்பல கடைகளை முன்திட்டமிட்டபடி எவரும் ஏலம் எடுக்காமல் விடுதல் போன்றஉத்திகளைக் கையாண்டனர். எனவே மாநில அரசு சில்லறை விற்பனையையும் தானே செய்ய முன் வந்தது. அக்டோபர் 2003 இல்தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937  இல்  ஒரு திருத்தத் செய்ததன்  மூலம்  தமிழ்நாடு  மாநில  வாணிபக் கழகத்திற்கு  மதுவிற்பனையில்  மாநிலம்  முழுவதும்  ஏகபோக  உரிமையை  அளித்தது. ஜெயலலிதா  தலைமையிலான  அதிமுக  அரசால் செய்யப்ப்பட்ட  இம்மாற்றம் நவம்பர்  292003  இல்  அமலுக்கு  வந்தது.  தொடக்கத்தில் திமுக  இதை எதிர்த்தாலும்2006 ஆம்  ஆண்டு மு.கருணாநிதி  தலைமையிலான அரசு பொறுப்பேற்ற  பின்னர்தமிழ்நாடு அரசுநிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் ஏகபோக மதுவிற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய் கிட்டியதால்இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்து செயல்படுத்தி வந்தது இதனால் மது  விற்பனையில் தமிழ்நாடு  மாநில  வாணிபக் கழகத்தின்தனியுரிமை தொடர்கிறது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு மாநில அரசு நிறுவனம்.தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர். இந்நிறுவனம்அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில்இருந்து வருகிறது. இதன் இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்கள்அனைவரும் இந்திய ஆட்சிப் பணி (..) அதிகாரிகள். இதன்தலைமை அலுவலகம் சென்னைஎழும்பூரில் உள்ள சென்னைபெருநகர் வளர்ச்சி குழுமக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடுமாநில வாணிபக் கழகம் ஐந்து நிர்வாக மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னைகோவைமதுரைதிருச்சி மற்றும் சேலம் ஆகிய இவ்வைந்து மண்டலங்களும் மண்டல மேலாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன. இவைமேலும் 33 வருவாய் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுஒவ்வொருமாவட்டமும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ் இயங்குகின்றது.  2010  ஆம்  ஆண்டுவாக்கில்  தமிழ்நாடு மாநில  வாணிபக்  கழகத்திற்கு  தமிழகமெங்கும்  6500 மதுக்கடைகளும், 41  சேமிப்புக்  கிடங்குகளும் உள்ளன.  இந்நிறுவனத்தில் மொத்தம்  36,000  ஊழியர்கள்  பணியாற்றுகின்றனர்.  இவர்கள்  அரசு  நிறுவனத்தில் பணிபுரிந்தாலும்  ஏனைய  அரசு  ஊழியர்களுக்கு  வழங்கப்படும்  சலுகைகளும்  உரிமைகளும்  (எட்டு மணி நேர வேலை நாள்ஊதியத்துடன் விடுமுறைகள் போன்றவை) கொடுக்கப்படவில்லைமேலும் இவர்களுக்கு தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக்  கழகத்தின்  மதுக்  கடைகளுக்கு  தனிப்பெயர்கள் எதுவும் கிடையாதுமுன்பு  டாஸ்மாக்  கடை என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டதுடன்  அவ்வாறே  அழைக்கப்பட்டன. பின்னர்  இது கோயம்புத்தூரில்  நடைபெற்ற  உலகத் தமிழ்  செம் மொழிமாநாட்டை  ஒட்டி  "தமிழ்நாடு  மாநில  வாணிபக் கழகம்" என்கிற பெயர்ப்பலகைக்கு மாற்றப்பட்டது.  இக்கடைகளில் அதிகமானகடைகளில் மது அருந்த தனி இடவசதி (பார்) செய்து தரப்பட்டுள்ளது.இந்த மது அருந்தும் இடம் மற்றும் சிறு உணவக வசதிகளை செய்துஅதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உரிமை ஆண்டுதோறும் தனிஏலம் மூலம் விடப்படுகிறது. இக்கடைகள் பொது மக்களால் "வைன்ஷாப்" என்று பரவலாக வழங்கப்பட்டாலும் பிற மதுவகைகளும் இங்கு விற்கப்படுகின்றன.

டாஸ்மாக்கின் ஆண்டு வருவாய்
நிதியாண்டு
வருவாய்
(கோடிகளில்)
மாற்றம்
2002 - 03
2,828.09
2003 - 04
3,639
28.67%
2004 - 05
4,872
33.88%
2005 - 06
6,086.95
24.94%
2006 - 07
7,300
19.93%
2007 - 08
8,822
20.85%
2008 - 09
10,601.5
20.17%
2009 - 10
12,491
17.82%
2010 - 11
14,965
19.80%

















அரசு மதுக்கடைகளை  கையகப்படுத்தியபின்  டாஸ்மாக்கின் வருவாய்  ஆண்டுதோறும்  20 சதவிகித  அளவில் அதிகரித்து  வந்துள்ளது.  இந்நிறுவனம்  தொடங்கப்பட்ட 1983  ஆம் ஆண்டில் இதன் மொத்தவருவாய் 183 கோடிரூபாயாக இருந்தது. சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தயநிதியாண்டில் (2002-03) இதன் மொத்த வருவாய் 3499.75 கோடிகள். இதில்  அரசுக்குக்  கிட்டிய  வரி வருவாய் 2 ,828.09  கோடி. மதுக்கடைகளை  நடத்த  ஆரம்பித்த  பின்  2003-04  நிதியாண்டிற்கான  வரி  வருவாய்  3,639 கோடியாக  உயர்ந்தது.
இதில்  சுங்கவரியும்விற்பனை வரியும்  தலா  50 சதவிகிதம். நிர்வாகச்  செலவுகளையும்,  பணியாளர்  ஊதியத் தொகையையும் கழித்த  பின்னர்மிச்சமுள்ள  வரி வருவாய்  முழுக்க  அரசுக்குலாபமே.  ஏனெனில்  அரசே  மொத்த  விற்பனையாளராகவும், சில்லறை  விற்பனையாளராகவும்  உள்ளதால்இரு  விலைகளுக்கும்  உள்ள வித்தியாசம்  அரசின் கைக்கே வந்து சேர்கிறது. அடுத்த நான்கு நிதியாண்டுகளில் வரி வருவாய் முறையே 4872, 6087, 7300 மற்றும் 8822  கோடி ரூபாய்களாக  இருந்தது. 2005-06  ஆம்  நிதியாண்டில்  23 ஆண்டுகளாக  நிலைத்து  வந்த  மது  விற்பனை  வருவாய்  சாதனைமுறியடிக்கப்பட்டது.  2008-09  நிதியாண்டில்  10,601.5  கோடிகளாக  உயர்ந்து, 10,000  கோடி இலக்கு எட்டப்பட்டது. 2009-10  மற்றும்  2010-11 நிதியாண்டுகளில் வருவாய்  முறையே  12,491  மற்றும் 14,965  கோடிகளாக  இருந்தது.  மது  விற்பனையில்  80  சதவிகிதம்  விஸ்கிபிராந்திரம்,  வோத்கா  போன்ற  "ஹாட்"  மது   வகைகளும்மிச்சமுள்ள  20 சதவிகதத்தை  பீர்களும்  பிடித்துள்ளன.
வரி  வருவாயைத் தவிரபார்  உரிமங்களை  ஆண்டு தோறும் தனியாருக்கு  ஏலம்  விடுவதன்  மூலமும் அரசுக்கு  வருவாய் கிடைக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும்  குடிப்பழக்கமும்அவ்வப்போது  நிகழும்  மது  விலையேற்றமும்  இச்சீரான  வருவாய் வளர்ச்சிக்கு காரணங்களாகக் கருதப்படுகின்றன.

தமிழகத்தில் டாஸ்மாக் பார் பயங்கரம்:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்துவங்கி பத்தாவது ஆண்டினை நெருங்கிவரும் நிலையில் விற்பனையில் டாஸ்மாக்கடைகள் வசூல் சாதனைகள் படைத்துவருவது போன்று டாஸ்மாக் பார்கள்குற்ற நடவடிக்கைகளில் சாதனைபடைத்து வருகின்றனசமீபகாலமாக பார்கள் அனைத்தும் அழுக்கடைந்தசுகாதாரமற்ற நோய்களை உற்பத்தி செய்யும்மையங்களாக மட்டுமின்றி திருட்டு மற்றும் கொலைகளத்திற்கான திட்டம்தீட்டும் இடமாகமட்டுமின்றி குற்றநடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் இடமாகவு அமைந்துள்ளதுடாஸ்மாக் பார்களில் தொடர்ந்து கொலைகளும் கொள்ளைகளும் அரசியல் குண்டர்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
“பார்களில் நடக்கும் இந்த குற்றநடவடிக்கைகள் குறித்து காவல் துறையினரிடம் கேட்கும்பொழுது ஒவ்வொரு பார்களும் அந்த பகுதி அரசியல்வாதிகளின் கையில்இருப்பதால் தான் பெருமளவில் கொலை கொள்ளைகள் நடைபெறுகின்றன எனகூறுகின்றனர்." நன்றி tlmes of india டிசம்பர்2,2012.
இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும்டாஸ்மாக் பார்களானது தங்களதுகட்சியினரின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர்பார்களின் ஏலம் அரசு அதிகாரிகளால் நடத்தப்படுவதாக காட்டினாலும் உண்மையில் ஆளும் கட்சியினரின்   மாவட்ட செயலாளர்களாலேயே சிண்டிகேட் அடிப்படையில் நடைபெறுகின்றதுதற்பொழுது சென்ற ஆட்சிக் காலத்தில் பார் ஏலத்தில் பலகோடிஊழல் நடந்ததாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றனஉண்மைதான் அது இன்றும் ஆளும்கட்சியினரால் தொடரப்பட்டு வருகின்றனஇதில் அரசிற்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுத்துவதுடன் அரசியல்வாதிகள் பார்களை மட்டுமின்றி கடைஊழியர்களிடமும் தங்களின் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி இலவசமாக குடித்து அரசியல்குண்டர்களாக வளம்வருவதோடு பதவிபோட்டியில் அரசியல் படுகொலைகளை செய்து வருகின்றனஇதற்கான திட்டமிடும் இடமாக பார்களைபயன் படுத்திவருகின்றனகடந்த 27 நவம்பர்2012 அன்று சென்னை வேலச்சேரியில்உள்ள டாஸ்மாக் பாரில் பார் ஏலம் எடுப்பது தொடர்பான பிரச்சனையில் திமுகமற்றும் அதிமுக அரசியல் குண்டர்களின் மோதலில் குடிக்கவந்த அப்பாவி மென்பொருள் பொறியாளர் சந்திரசேகர் (வயது 45) கொலை செய்யப்பட்டார்.இதுபோன்ற நிகழ்வுகள் சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரவலாகநடைபெறுகின்றனஇச்செயல்களை ஆளும்கட்சியை சேர்ந்தவர்களினால் நடத்தப்படுவதால் கொலை போன்ற பெரும்குற்றம் நடைபெற்றால் மட்டுமே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர்.குடிக்க வந்த அப்பாவிகள் தாக்கப்படுவதுகோஷ்டி மோதல் போன்ற நிகழ்வுகள் பார்களின் அன்றாடநிகழ்ச்சியாக மாறிவருகின்றன.இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம்வாங்கும் வாடிக்கையாளர்கள் பார்களில் மதுஅருந்த பயப்படுகின்றனர்மேலும் மாததுவக்கத்தில் சம்பளபணத்துடன் குடிக்கவரும் மதுப்பிரியர்களை அரசியல் குணடர்கள் தங்களின் அடியாட்களைக் கொண்டு அதிகம்  குடிக்க செய்து பணம் பரித்து வருகின்றனகீழ்கண்ட நிகழ்வுகள் சென்னையில் மட்டும் கடந்த 4ஆண்டுகளில் நடைபெற்ற குற்றசெயல்களில் முக்கியமானவைகளின் தொகுப்பு.

சென்னை பார்பயங்கரசம்பவங்கள்
                மே 2009.சென்னைஅண்ணாநகர் டாஸ்மாக் பார்அருகே ஒரு கும்பல்                       
      ரமேஷ்என்பவரை கொலை செய்தது.

                சென்னை திருவெற்றியூர் டாஸ்மாக் பார் அருகே ஒரு கும்பல் விநாயகம் என்பவரை                  
      கொலை செய்ததுசெப்டம்பர்2010.
               சென்னை ஜீ.எஸ்.டீ ரோடு டாஸ்மாக்பாரினில் கலவரம்    ஐந்து பேர்  கைது.

      செப்டம்பர்2010.
               சென்னை கோட்டூர்புரம் டாஸ்மாக் பாரினில் இரண்டுகும்பல் மோதல்பிப்ரவரி 2011.
               சென்னை திருவெற்றியூர் டாஸ்மாக் பார் அருகே அடையாளம் தெரியாதவர்பிணம்.

      மே 2012.
               சென்னை எக்மோர் டாஸ்மாக் பாரில் அதிமுக தொண்டர் மீது தாக்குதல்அக்டோபர்2012.
              சென்னை எக்மோர் டாஸ்மாக்  பாரினில் கும்பல் தாக்குதல் நவம்பர்2012. வேலச்சேரி      
      டாஸ்மாக் பாரினில் மென்பொருள் பொறியாளர் சந்திரசேகர் குல்கர்னி கொலை
தமிழகம் ழுழுமைக்கான டாஸ்மாக் பார்களின் குற்றசெயல்களை எழுதநினைத்தால் பக்கங்கள் கொள்ளாது.
தற்பொழுது டாஸ்மாக் கடைகளில் விற்பனைச்சரிவு என்றசெய்திக்கானகாரணிகளில் இந்த சம்பவங்களும் ஒன்றாகும்.டாஸ்மாக் பார்கள் ஆளும்அரசியல்கட்சியினர் பணம் சம்பாதிக்கும் இடம் என்பதிலிருந்து மாற்றி பார்களைஅரசே ஏற்று நடத்தினால் அரசிற்கான டாஸ்மாக் வருமானம் அதிகரித்துஅரசுநலத்திட்டங்களுக்கு பயன்படும்.இதை அரசிற்கு யார் உணர்த்துவார்கள்?