Home

Sunday, 3 February 2013

பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார் திருமாவளவன்...

பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார். என்று பலத்த சிரிப்புடன் ராஜபக்சே கூற, அதைச் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாராம் திருமாவளவன்:

தன்னைச் சந்திக்க வந்திருந்த தமிழ் எம்பிக்கள் குழுவிலிருந்த திருமாவளவனை சுட்டிக்காட்டிய ராஜபக்சே, “இவர் மட்டும் பிரபாகரனோடு இருந்திருந்தால் தொலைந்திருப்பார்” என்று கூறியதாகவும், அதைப் புன்னகையுடன் திருமாவளவன் கேட்டுக் கொண்டதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் ராஜபக்சேவை போய்ச் சந்தித்தனர். ஜேஎம் ஆரூண், டிஆர் பாலு ஆகியோர் அவருக்கு பொன்னாடை போர்த்தினர். முகம் முழுக்க சிரிப்புடன் அவருடன் உரையாடினர் ராஜபக்சே. அவர்களுடன் திருமாவளவனும் இருந்தார்.

அப்போது கனிமொழியிடம் திருமாவளவனைச் சுட்டிக் காட்டிய ராஜபக்சே, “இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் தப்பி விட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார்…” என்று பலத்த சிரிப்புடன் ராஜபக்சே கூற, அதைச் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாராம் திருமாவளவன்.

உண்மை என்னவென்பதை திருமாவளவன் நாளை சொல்வதாக அறிவித்துள்ளார். பார்ப்போம்!

No comments:

Post a Comment