Home

Sunday, 3 February 2013

பல கட்சிகளை வாழவைத்தும் வன்னியர்களை யாரும் வாழ வைக்கவில்லை:


புதுவை மாநிலத்தில் வன்னியர்கள் 60முதல் 70சதவீதம் வரை வாழ்கின் றனர். நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களை தேர்ந் தெடுத்தால் நாம் இன்னும் வளரலாம். பிறருக்கு கொடி பிடித்து, கோஷம் போடும் நிலையை மாற்றி நாம் நாட்டை ஆளவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறார்.

வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. இந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வில்லை. வன்னியர் சமுதாய மக்கள் உலகெங்கும் வாழ் கின்றனர். சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி வன்னியர் களின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வந்தது.

இதனால் நாம் அடிமைப்பட்டோம். அதன்பின்பு டாக்டர் ராமதாஸ் வந்தார். நமக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980-ல் போராட்டம் அறிவித்தார். இதற்காக 21 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அதன் பின்புதான் இடஒதுக்கீடு கிடைத்தது. இருந்த போதிலும் புதுவையில் இந்த இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதையும் போராடி பெற்றுத் தந்தார்.

எத்தனையோ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் முதல்-அமைச்சராகி உள்ளனர். ஆனால் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தாழ்த்தப்பட்டவர் இன்னும் முதல்- அமைச்சர் ஆகவில்லை. இதற்காக டாக்டர் ராமதாஸ் போராடுகிறார். வடதமிழ்நாட்டில் 120 தொகுதிகளில் நாம் பெரும்பான்மையாக உள்ளோம். நமது சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டும் மாம்பழ சின்னத்திற்குதான் என்று முடிவு செய்தால் யார் தயவும் இன்றி நாம் ஆட்சியை பிடிக்க முடியும்.

புதிய கட்சிகள் தொடங்கும்போது அதற்காக உயிர் தியாகம் செய்பவர்கள் வன்னியர்கள்தான். ஜெயலலிதா கைதான போது பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி தற்போது தூக்கு தண்டனை கைதிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். பல கட்சிகளை நாம் வாழவைத்தோம். நம்மை யாரும் வாழ வைக்கவில்லை. 

தமிழகம்- புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. வன்னிய சமுதாயத்துக்காக டாக்டர் ராமதாஸ் வன்னியர் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். வன்னியர் சமுதாயத் தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ம.க.வுக்கு வாக் களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல் -அமைச்சராக வருவார்.

நமது சமுதாயத்துக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும். இந்த சமுதாயத்தை டாக்டர் ராம தாசால்தான் வாழவைக்க முடியும்.  

No comments:

Post a Comment