Home

Monday, 4 February 2013

பா.ம.க.வுக்கு இணைய தளம் மூலம் ஆதரவு திரட்ட முடிவு: அன்புமணி ராமதாஸ்

இணைய தளங்கள் மூலம் செயல்படும் வன்னியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கு மாம்பலத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

உலக அளவில் சமூக ஊடகங்கள் மூலம் பல புரட்சிகள் நடந்து வருகின்றது. தமிழகத்தில் கூட கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் இணைய தளம் மூலம் கருத்துக்கள் பரிமாறியதால் தேர்தலில் மாற்றத்தை உருவாக்கினார்கள்.

இளைய தலைமுறையினர் இணைய தளம் மற்றும் மொபைலுடன் தான் இருக்கிறார்கள். எனவே கருத்துக்கள் பரிமாற்றத்துக்காக 4 லட்சம் இளைஞர்களின் 'டேட்டா ஆப் பேஸ்' தயாரித்து இருக்கிறேன். இதை 10 லட்சமாக உயர்த்த முடிவு செய்து உள்ளேன். வருங்காலத்தில் இணைய தளங்கள் வழியாக பா.ம.க.வின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தப்படும்.

இதன் மூலம் பொது மக்களிடம் ஆதரவு திரட்டப்படும் கட்சிக்காக "டுவிட்டர்" "பேஸ்புக்", "பிளாக்" உருவாக்கப்படும். பா.ம.க. பற்றிய எதிர் கருத்துக்களை முறியடிக்கும் வகையில் உடனடியாக இந்த வலை தளம் மூலம் பதில் கொடுக்கப்படும்.

தர்மபுரி பிரச்சினையில் ஊடகங்கள் பா.ம.க.வுக்கு எதிராக செயல்படுகின்றன. ஆனால் உண்மை நிலை வேறு. 85 சதவீத மக்கள் பா.ம.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment