தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்துவங்கி பத்தாவது ஆண்டினை நெருங்கிவரும் நிலையில் விற்பனையில் டாஸ்மாக்கடைகள் வசூல் சாதனைகள் படைத்துவருவது போன்று டாஸ்மாக் பார்கள்குற்ற நடவடிக்கைகளில் சாதனைபடைத்து வருகின்றன. சமீபகாலமாக பார்கள் அனைத்தும் அழுக்கடைந்த, சுகாதாரமற்ற நோய்களை உற்பத்தி செய்யும்மையங்களாக மட்டுமின்றி திருட்டு மற்றும் கொலைகளத்திற்கான திட்டம்தீட்டும் இடமாகமட்டுமின்றி குற்றநடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் இடமாகவு அமைந்துள்ளது. டாஸ்மாக் பார்களில் தொடர்ந்து கொலைகளும் கொள்ளைகளும் அரசியல் குண்டர்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
“பார்களில் நடக்கும் இந்த குற்றநடவடிக்கைகள் குறித்து காவல் துறையினரிடம் கேட்கும்பொழுது ஒவ்வொரு பார்களும் அந்த பகுதி அரசியல்வாதிகளின் கையில்இருப்பதால் தான் பெருமளவில் கொலை கொள்ளைகள் நடைபெறுகின்றன எனகூறுகின்றனர்." நன்றி tlmes of india டிசம்பர்2,2012.
இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும்டாஸ்மாக் பார்களானது தங்களதுகட்சியினரின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர். பார்களின் ஏலம் அரசு அதிகாரிகளால் நடத்தப்படுவதாக காட்டினாலும் உண்மையில் ஆளும் கட்சியினரின் மாவட்ட செயலாளர்களாலேயே சிண்டிகேட் அடிப்படையில் நடைபெறுகின்றது. தற்பொழுது சென்ற ஆட்சிக் காலத்தில் பார் ஏலத்தில் பலகோடிஊழல் நடந்ததாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. உண்மைதான் அது இன்றும் ஆளும்கட்சியினரால் தொடரப்பட்டு வருகின்றன. இதில் அரசிற்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுத்துவதுடன் அரசியல்வாதிகள் பார்களை மட்டுமின்றி கடைஊழியர்களிடமும் தங்களின் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி இலவசமாக குடித்து அரசியல்குண்டர்களாக வளம்வருவதோடு பதவிபோட்டியில் அரசியல் படுகொலைகளை செய்து வருகின்றன. இதற்கான திட்டமிடும் இடமாக பார்களைபயன் படுத்திவருகின்றன. கடந்த 27 நவம்பர்2012 அன்று சென்னை வேலச்சேரியில்உள்ள டாஸ்மாக் பாரில் பார் ஏலம் எடுப்பது தொடர்பான பிரச்சனையில் திமுகமற்றும் அதிமுக அரசியல் குண்டர்களின் மோதலில் குடிக்கவந்த அப்பாவி மென்பொருள் பொறியாளர் சந்திரசேகர் (வயது 45) கொலை செய்யப்பட்டார்.இதுபோன்ற நிகழ்வுகள் சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரவலாகநடைபெறுகின்றன. இச்செயல்களை ஆளும்கட்சியை சேர்ந்தவர்களினால் நடத்தப்படுவதால் கொலை போன்ற பெரும்குற்றம் நடைபெற்றால் மட்டுமே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர்.குடிக்க வந்த அப்பாவிகள் தாக்கப்படுவது, கோஷ்டி மோதல் போன்ற நிகழ்வுகள் பார்களின் அன்றாடநிகழ்ச்சியாக மாறிவருகின்றன.இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம்வாங்கும் வாடிக்கையாளர்கள் பார்களில் மதுஅருந்த பயப்படுகின்றனர். மேலும் மாததுவக்கத்தில் சம்பளபணத்துடன் குடிக்கவரும் மதுப்பிரியர்களை அரசியல் குணடர்கள் தங்களின் அடியாட்களைக் கொண்டு அதிகம் குடிக்க செய்து பணம் பரித்து வருகின்றன. கீழ்கண்ட நிகழ்வுகள் சென்னையில் மட்டும் கடந்த 4ஆண்டுகளில் நடைபெற்ற குற்றசெயல்களில் முக்கியமானவைகளின் தொகுப்பு.
சென்னை பார்பயங்கரசம்பவங்கள்:
மே 2009.சென்னைஅண்ணாநகர் டாஸ்மாக் பார்அருகே ஒரு கும்பல்
ரமேஷ்என்பவரை கொலை செய்தது.
ரமேஷ்என்பவரை கொலை செய்தது.
சென்னை திருவெற்றியூர் டாஸ்மாக் பார் அருகே ஒரு கும்பல் விநாயகம் என்பவரை
கொலை செய்தது. செப்டம்பர்2010.
கொலை செய்தது. செப்டம்பர்2010.
சென்னை ஜீ.எஸ்.டீ ரோடு டாஸ்மாக்பாரினில் கலவரம் ஐந்து பேர் கைது.
செப்டம்பர்2010.
சென்னை கோட்டூர்புரம் டாஸ்மாக் பாரினில் இரண்டுகும்பல் மோதல். பிப்ரவரி 2011.
சென்னை திருவெற்றியூர் டாஸ்மாக் பார் அருகே அடையாளம் தெரியாதவர்பிணம்.
மே 2012.
சென்னை எக்மோர் டாஸ்மாக் பாரில் அதிமுக தொண்டர் மீது தாக்குதல். அக்டோபர்2012.
சென்னை எக்மோர் டாஸ்மாக் பாரினில் கும்பல் தாக்குதல் நவம்பர்2012. வேலச்சேரி
டாஸ்மாக் பாரினில் மென்பொருள் பொறியாளர் சந்திரசேகர் குல்கர்னி கொலை
டாஸ்மாக் பாரினில் மென்பொருள் பொறியாளர் சந்திரசேகர் குல்கர்னி கொலை
தமிழகம் ழுழுமைக்கான டாஸ்மாக் பார்களின் குற்றசெயல்களை எழுதநினைத்தால் பக்கங்கள் கொள்ளாது.
தற்பொழுது டாஸ்மாக் கடைகளில் விற்பனைச்சரிவு என்றசெய்திக்கானகாரணிகளில் இந்த சம்பவங்களும் ஒன்றாகும்.டாஸ்மாக் பார்கள் ஆளும்அரசியல்கட்சியினர் பணம் சம்பாதிக்கும் இடம் என்பதிலிருந்து மாற்றி பார்களைஅரசே ஏற்று நடத்தினால் அரசிற்கான டாஸ்மாக் வருமானம் அதிகரித்துஅரசுநலத்திட்டங்களுக்கு பயன்படும்.இதை அரசிற்கு யார் உணர்த்துவார்கள்?
No comments:
Post a Comment