Home

Sunday, 3 February 2013

அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா

அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா?வன்முறை தூண்டும் வசனம் கட்சி கொள்கையா?

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நத்தம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.

ஒரு தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரவேண்டும் அதைவிடுத்து அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா? வன்முறை தூண்டும் வசனம் கட்சி கொள்கையா? இங்க பாருங்க எப்படி எல்லாம் வசனம் எழுதப்பட்டுள்ளது பாருங்கள் இனி திருமாவளவனுடன் கூட்டனி கிடையாது, ஒழுக்கமான தலித் தலைவர் உருவானல் கூட்டணி வைப்போம் என்றார் ராமதாஸ்.

வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் எந்த சாதிக்கும் எதிரான இயக்கம் இல்லை. தலித்களுக்கு எதிராக நான் பேசியது இல்லை. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, சி.பி.ஐ.யோ விசாரணை நடத்து ஆட்சேபணை இல்லை. ஆனால் உண்மை காரணம் வெளி கொண்டுவர வேண்டும். கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது. அதன் மூலமாக தமிழ்தேசியம் உருவாகாது என்றார் அழுத்தமாக.

No comments:

Post a Comment