Home

Sunday, 3 February 2013

படையாட்சி ("படை வீரர்களை ஆள்பவன்" என்பதே படை + ஆட்சி. படைவீரர்களை ஆள்வோன் என்ற பொருளைத்தான் தருகிறது.)


சரித்திர(முறையான) நூல்களில் தேவர் இனத்தவர் சேர,சோழ,பாண்டியர் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.இடைக்காலச் சோழர் ஆட்சியில் நமது இனத்தவர் பெரும் செல்வாக்கு மிக்கோராக இருந்தமை கல்வெட்டுக்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.சோழர் காலத்திய சிற்றரசர்களான சம்புவராயர்,காடவராயர் போன்றோர் நமது இனத்தவர்.இதனை வரலாற்றுத் துறை உறுதிப்படுத்தியும் உள்ளது.

நமது இனத்தவர் குறுநில மன்னர்களாகவும் ,படைத் தளபதிகளாகவும், வீரர்களாகவும் இருந்துள்ளனர்.

படையாட்சி என்றால் காலாட்படை வீரன் என்பது சரியான பொருளன்று. படை ,ஆட்சி - இதில் எந்தச் சொல் காலாட்கள் என்று அர்த்தம் தருகிறது?படை வீரன் -அவ்வளவே.
ஆனால் சரியான பொருள் "படை வீரர்களை ஆள்பவன்" என்பதே படை + ஆட்சி. படைவீரர்களை ஆள்வோன் என்ற பொருளைத்தான் தருகிறது.கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன.

உதாரணத்திற்கு"ஓய்மாநாட்டு முந்நூற்றுப் பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திரசோழ சம்புவராயன்"இக்கல்வெட்டு வாசகம் பள்ளி(வன்னியர்) இனத்தவனான ராஜேந்திர சோழச் சம்புவராயனைக் குறிப்பிடுகிறது.ஓய்மாநாடு என்பது இன்றைய திண்டிவனப் பகுதியை உள்ளடக்கியது. நாலாயிரவன் என்பது நாலாயிரம் வீரர்களைக் கொண்டவன் என்பதைக் குறிக்கிறது.இந்த சம்புவராயன் நாலாயிரம் வீரர்களுக்குத் தலைவன் என்பதையே இக்கல்வெட்டு வாசகம் உணர்த்துகிறது.சம்புவராயர்கள் படைத்தளபதிகளாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்தது வரலாறு .சோழர் ஆட்சி நலிவுற்றிருந்தபோது ஒரு முறை சோழ மன்னர் ஒருவரைத் தோற்கடித்து சேந்தமங்கலம்(தென்னாற்காடு) சிறையில் வைத்த காடவராயர் கோப்பெருஞ்சிங்கன் நமது இனத்தவன்தான்.கோப்பெருஞ்சிங்கன் சிற்றரசனாயிருந்தும் தனது வலிமையினால் ஏறக்குறைய பேரரசர் நிலையை அடைந்தவன்.நமது இனத்தின் குலச் சின்னம் வில். நமது இனத்தவர் வில்லாற்றல் மிகுந்தோர்.சோழர்படைகளில் நமது இனத்தவர் விற்போர் வீரராயும் இருந்தனர்.


நமது இன வில் வீரர் கொண்ட படை "வில்லிகள் படை" எனப்பட்டது.சோழ மன்னர்கள் வில்லிகள் படை இருந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.ஜனநாதத் தெரிந்த வில்லிகள்,பண்டிதசோழத் தெரிந்த வில்லிகள்,உடையார்ப் படை தெரிந்த வில்லிகள்,வீரநாராயணத் தெரிந்த வில்லிகள்எனப் பல படைகள் சோழரிடமிருந்தது.வில்லாற்றலில் சிறந்தவர்களான பள்ளி(வன்னியர்) வீரர்கள் "வில்லிகள்" எனப்பட்டனர்.படை வீரராயும், படைத்தளபதிகளாகவும்,சிற்றரசராகவும் நமது இனத்தவர் இருந்ததை எவராலும் மறுக்க இயலாது.சோழர்களின் வலிமைக்குக் காரணமாக விளங்கியோர் நாம்.பாண்டியர் பெருமதிப்பையும் பெற்றிருந்தவர் நமது இனத் தளபதிகள். பாண்டிய மன்னருக்குச் சமமான இருக்கையில் அமரும் தகுதியைப் பெற்றவர் நமது இனத் தளபதிகள்.வீரத்தில் நாம் யாருக்கும் சளைத்தவரல்ல

No comments:

Post a Comment