சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உயிர்க்கொல்லி நோய் எனப்படும் எய்ட்சை விட மிகப்பெரிய நோயாக குடிநோய் உள்ளது. புற்றுநோய், இருதய நோய்கள், கல்லீரல் பாதிப்பு என 60 வகையான நோய்களுக்கு மதுபானம் காரணமாக இருக்கிறது. ஆண்டுக்கு 3.20 லட்சம் பேர் குடி பழக்கத்தால் இறக்கின்றனர்.
சிறுவர்களும், இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாவதற்கு விளையாட்டின் மூலம் மதுபான விளம்பரங்கள் திணிக்கப்படுகிறது. இத்தகைய விளம்பரங்கள் நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் சோடா, தண்ணீர், இசைத்தட்டு என இல்லாத பொருட்களின் பெயரில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இத்தகைய மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க முடியாது என சச்சின் டெண்டுல் மறுத்துள்ளார். எனவே, கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால நலனை மனதில் நிறுத்தி மறைமுக மதுபான விளம்பரங்களில் நீங்கள் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அதில் இருந்து உடனே வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment