தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மறுமலர்ச்சி ஏற்படும்
என்று பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.
நாகை மாவட்டம், குத்தாலம்
வட்டம், வழுவூரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற
பாமக இளைஞரணியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் விஜிகே. மணி இல்ல விழாவில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது:
தமிழகத்தை ஆள பாமகவுக்கு ஒருமுறை வாய்ப்பளித்தால் மறுமலர்ச்சியை
ஏற்படுத்துவோம். பாமக ஆட்சிக்கு வந்தால், தேவையற்ற இலவசங்கள் நிறுத்தப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள்
இலவசமாக வழங்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு
தேவையான இடுபொருள்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழில் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும்
இலவசமாக வழங்கப்படும். இதுபோன்ற நல்லாட்சி தமிழகத்தில் அமைய 2016-ல் பாமக ஆட்சி அமைக்க வேண்டும்.
திமுக, அதிமுகவில் அடிமைப்பட்டு கிடக்கும் மக்களை
மீட்க பாமகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சித் தொண்டர்களுக்கு வீரத்துடன், விவேகமும் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.
No comments:
Post a Comment